தி.மு.க. தரப்பில் தொடரப்பட்ட வழக்கினால் தான், ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிட முடியவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் முறையிட்டது.
சென்னை ஆர். கே. நகர் சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை நீக்கும் வரை, இத்தொகுதி க்கான இடைத்தேர்தலை நடத்த கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி வழக்கு தொடர்ந்தார்.
இத்தொகுதிக்கான இடைத் தேர்தலின் போது, பணம் பட்டுவாடா செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை தேர்தல் நடத்தக் கூடாது என திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த மருது கணேஷும் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த இரண்டு வழக்குகளையும் விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையத்தின் சார்பில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல்
பெஞ்ச்சில் இந்திய தேர்தல் ஆணைய வழக்கறிஞராள்
இன்று முறையிடப்பட்டது. இவ்விரு வழக்குகளும் நிலுவையில் இருப்பதால்தான், ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிட முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இவ்விரு வழக்குகளையும் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தனர்.