Breaking News

பணிகளிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் வழக்கறிஞர்களாக தொழில்புரிய தடை விதிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்ற சங்கத்துக்கு நீதிபதி என்.கிருபாகரன் அறிவுறுத்தியுள்ளார்.

பல்வேறு பணிகளிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் வழக்கறிஞர்களாக தொழில்புரிய தடை விதிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்ற சங்கத்துக்கு நீதிபதி என்.கிருபாகரன் அறிவுறுத்தியுள்ளார்.

தனிப்பட்ட வழக்கில் ஒன்றில் ஆஜரான சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணனிடம் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், அதில் உரிய உத்தரவு பிறப்பிப்பதாகவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். இதுபோன்ற வழக்கறிஞர் தொழில் புரிபவர்களாலும், முறைகேடாக கர்நாடகா, ஆந்திராவில் சட்டப்படிப்பை படிப்பவர்களால் தான், புனிதமாக கருதப்பட்ட தொழில் மீதான மாண்பு பறிபோய்விட்டதாகவும், அதை மீட்டெடுக வேண்டியது நமது கடமை என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

அவப்பெயர் ஏற்படுத்தும் வழக்கறிஞர்கள் மற்றும் ஓய்பெற்ற பின்னர் வழக்கறிஞராக ஆகும் நபர்களால்தான் கட்டப்பஞ்சாயத்து அதிகரித்துவிட்டதாகவும், அவர்களை தடுக்க முடியாவிட்டால் மீண்டும் வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிட வேண்டாமென என நீங்கள் சிந்திக்க

மக்கள் சார்ந்த பிரச்சினைகள், வழக்கறிஞர் சார்ந்த பிரச்சினைகள், காவல்துறைக்கு எதிராக என பல்வேறு போராட்டங்களிலும், புறக்கணிப்பிலும் ஈடுபடும் வழக்கறிஞர்கள், தொழிலை தூய்மைப்படுத்தும் பணியையும் முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். வழக்கறிஞர் தொழிலை புனிதப்படுத்த நாம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் ஆண்டவன் தான் காப்பாற்ற முடியும் என்றும் வேதனை தெரிவித்தார்.

அப்போது, சங்க தலைவர் மோகனகிருஷ்ணன், இதுதொடர்பாக 2006ஆம் ஆண்டு முதல் போராடி வருவதாகவும், இதுபோன்ற வழக்குக்காக மதுரையில் தொடர்ந்து ஆஜரானதாகவும் தெரிவித்தார். தொழிலின் மாண்பை காக்கவே தாங்களும் பாடுபடுவதாகவும், பார் கவுன்சில் அதிகாரத்துக்குட்பட்ட விவகாரம் என்பதால் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து சங்கத்தின் பிற நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பதாக தெரிவித்தார்.

கருத்துக்கள்

கருத்துக்கள்