Breaking News

சொகுசு கார் வழக்கில் அமலாக்கப்பிரிவு முழுமையாக செயல்படவில்லை என அமலாக்கத்துறைக்கு எழும்பூர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. வழக்கு தொடர்பான வனைத்து ஆவணங்களை வரும் 29 ஆம் தேதிக்கு தாக்கல் செய்ய உத்தரவு.

சொகுசு கார் வழக்கில் அமலாக்கப்பிரிவு முழுமையாக செயல்படவில்லை என அமலாக்கத்துறைக்கு எழும்பூர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. வழக்கு தொடர்பான வனைத்து ஆவணங்களை வரும் 29 ஆம் தேதிக்கு தாக்கல் செய்ய உத்தரவு.

கடந்த 1994 ஆம் ஆண்டு லண்டனிலிருந்து போலி ஆவணங்கள் மூலம் தமிழரசி பப்ளிக்கேஷன் நிறுவனத்தின் பெயரில் நடராஜன் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் லெக்சஸ் சொகுசு காரை இறுக்குமதி செய்துள்ளனர்.இதன் மூலம் 1.84 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த வழக்கில் இவர்கள் மீது அமலாக்கப்பிரிவு வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கிலிருந்து தம்மை விடுவிக்க கோரி நடராஜன் தரப்பில் எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் 2010 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தார்.7 ஆண்டுகளாக நிலுவையிலிருந்த வழக்கு கடந்த மாதம் 10 ஆம் தேதி நீதிபதி மலர்மதி முன் விசாரனைக்கு வந்தது. அப்போது, நடராஜனின் கோரிக்கையை ஏற்க்க மறுத்த நீதிபதி. அவரின் மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி மலர்மதி முன் விசாரனைக்கு வந்தது. அப்போது, கடந்த 2002 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு மந்தமாக நடைபெற்று வருவதாக தெரிவித்த நீதிபதி மலர்மதி ஆகஸ்ட் 29 ஆம் தேதிக்குள் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை நீதுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என அமலாக்கப்பிரிவுக்கு உத்தரவிட்டார். மேலும், குறித்த தேதிக்குள் ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்றால் அமலாக்கப்பிரிவின் விசாரணை சரியில்லை என கூறி வழக்கை முடித்து வைப்பேன் எனவும் எச்சரித்து விசாரணை 29 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

கருத்துக்கள்

கருத்துக்கள்