Breaking News

அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்கு டிடிவி தினகரன் எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜார் விசாரணை ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு.

அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்கு டிடிவி தினகரன் எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜார் விசாரணை ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு.

இங்கிலாந்தின் பார்க்லே வங்கியில் 1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலரை முறைகேடாக, டிப்பர் இன்வேஸ் மெண்ட் என்ற நிறுவனம் மூலமாக பணம் டெபாசிட் செய்யப்பட்டது. அதேபோல ஐரோப்பிய நாட்டில் ஹாப்ஸ்கேரப்ட் ஹோல்ட் ஹோட்டல் பெயரில் மூன்று நிறுவனங்கள் தொடங் கப்பட்டதில் 36.36 லட்சம் அமெரிக்க டாலரும், 1 லட்சம் பவுண்டு வரை அந்நிய செலாவணி மோசடியில் டி.டி.வி தினகரன் ஈடுபட்டதாக அவர் மீது 1996ம் ஆண்டு அமலாக்கபிரிவால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் ஜூன் மாதம் தினகரன் மீது எழும்பூர் பொருளாதார குற்றபிரிவு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது.இதனை எதிர்த்து டிடிவி தினகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே பதியப்பட்டுள்ள குற்றச்சாட்டை ரத்து செய்த நீதிபதி ரமேஷ் ஜூலை 31-ம் தேதிக்குள் மீண்டும் புதிய குற்றச்சாட்டு பதிவு நடத்த உத்தரவிட்டார். அதன்படி எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்ற நீதிபதி மலர்மதி டிடிவி தினகரன் மீது மீண்டும் குற்றசாட்டுகளை ஆகஸ்ட் 1 ஆம் தேதி பதிவு செய்தார்.
இந்நிலையில்
அமலாக்கதுறை சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்ய தினகரனுக்கு அவகாசம் வழங்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் தினகரன் தொடர்ந்த வழக்கில்
அமலாக்கபிரிவு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணையை ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என  தினகரக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் ஆஜர் ஆனார். இந்த வழக்கு நீதிபதி மலர்மதி முன் விசாரணை க்கு வந்தது. அப்போது அனைத்து சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என தினகரன் கூறினார். இதையடுத்து அமலாக்கதுறை சாட்சிகளிகளிடம் தினகரன் குறுக்கு விசாரணை செய்ய அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். ஆகஸ்ட் 28 ஆம் தேதி சாட்சிகளை அமலாக்கத்துறை கண்டிப்பாக ஆஜர் படுத்த வேண்டும் என்றும் அன்றைய தினம் தினகரன் ஆஜராக உத்தரவிட்டு குறுக்கு விசாரணை க்கு தினகரன் தரப்பு தயாராக இருக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.

கருத்துக்கள்

கருத்துக்கள்