Breaking News

சட்ட விரோதமாக அன்னிய முதலீடு பெற்ற மும்பை நிறுவனத்திற்கு உதவியதாக சிபிஐ பதிவு செய்த வழக்கை  ரத்து செய்ய கோரி கார்த்தி சிதம்பரம் தெடர்ந்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு.

சட்ட விரோதமாக அன்னிய முதலீடு பெற்ற மும்பை நிறுவனத்திற்கு உதவியதாக சிபிஐ பதிவு செய்த வழக்கை  ரத்து செய்ய கோரி கார்த்தி சிதம்பரம் தெடர்ந்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு.

கடந்த 2006 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது மும்பையில் உள்ள ஐ.என்.எக்ஸ் மீடியா என்ற  நிறுவனத்திற்கு மொரீஷியஸ் நாட்டிலிருந்து 4.62 கோடி ரூபாய் முதலீட்டை பெற 2008 ஆம் ஆண்டு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்தது.
ஆனால் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் சட்ட விரோதமாக 305 கோடி ரூபாய்  நேரடி அந்நிய முதலீட்டை அந்நிறுவனம் பெற்றுது. தன் தந்தை சிதம்பரத்தின் பதவியை தவறாக பயன்படுத்தி ஐ.என்.எக்ஸ் நிறுவனத்திற்கு உதவியதாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் கடந்த மாதம் 18 ஆம் தேதி
ஆஜராக சி.பி.ஐ சம்மன் அனுப்பியது.

இந்த சம்மனை ரத்து செய்யக்கோரியும், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய கோரியும் கார்த்தி சிதம்பரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நிதிபதி வேல்முருகன் முன்பு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு எழுத்து பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய சிபிஐ மற்றும் கார்த்திக் சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை வரும் 22 ஆம் தேதி அளிப்பதாக தெரிவித்தார்.

கருத்துக்கள்

கருத்துக்கள்