Breaking News

கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் பறிமுதல் செய்யப்படுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மசூதி ஒன்றில் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் பறிமுதல் செய்யப்படுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த ஐக்கிய ஜமாத் தலைவர் ஷா நவாஸ் கான் சென்னை உயர்நீதிமன்றத்தில், தாக்கல் செய்த மனுவில், பொள்ளாச்சி தாலுக்காவில் உள்ள மசூதிகளில் அனுமதிக்கப்பட்ட டெசிபல் அளவில் மட்டுமே ஒலிபெருக்கிகள் பயன்படுத்தபடுகின்றன. எனினும் எந்தவித அறிவிப்புமின்றி காவல் துறையினர் மசூதிகளுக்குள் நுழைந்த கூம்பு ஒலிபெருக்கிகளையும், பிற ஒலி பெருக்கி சாதனங்களையும் பறிமுதல் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரணைக்கு வந்தபோது, தரையிலிருந்து 15 மீட்டர் உயரத்தில் தான் ஒலி பெருக்கிகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒலி மாசு ஏற்படாது என்று மனுதார் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, மத சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை, சட்டத்திற்குட்பட்டு வழிபாடு நடைமுறையை பின்பற்றினால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், மசூதிகளில் காவல் துறையினர் பறிமுதல் செய்த ஒலி பெருக்கிகளின் விவரத்தை தனி மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 4 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

கருத்துக்கள்

கருத்துக்கள்