Breaking News

நெடுஞ்சாலைகளில் உள்ள விமான நிலையங்கள், ராணுவ கேன்டீன்களில் மதுபானம் விற்க அனுமதித்தது எப்படி ? என கேள்வி எழுப்பியதோடு, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெடுஞ்சாலைகளில் உள்ள விமான நிலையங்கள், ராணுவ கேன்டீன்களில் மதுபானம் விற்க அனுமதித்தது எப்படி ? என கேள்வி எழுப்பியதோடு, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவுபடி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள
மதுபான கடைகள், பார்கள் உள்ளிட்ட அனைத்து வகையாக மதுபான விற்பனை கூடங்களை கடந்த மார்ச் 31ம் தேதியுடன் மூட வேண்டும் என்று உள்ளது. ஆனால் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள விமான நிலையங்கள், ராணுவ கேன்டீன்களில் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இது உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் உள்ளது, எனவே நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள விமாநிலையங்களில் உள்ள வரியில்லாத மதுபான விற்பனை கடைகள் மற்றும் ராணுவ கேன்டீன்களில் மதுபான விற்பனைக்கு தடை உத்தரவிட வேண்டும் என சாகுல் ஹமீது என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்ற உத்தரவை மீறி தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள விமான நிலையங்கள், ராணுவ கேன்டீன்களில் மதுபானம் விற்க அனுமதித்தது எப்படி ? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள், டாஸ்மாக் நிர்வாகம், மது விலக்கு பிரிவு ஏ.டி.ஜி.பி உள்ளிட்டோர் 3 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 24ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள்