Breaking News

அடமான சொத்துகளை விற்க ராதிகா சரத்குமாருக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

அடமான சொத்துகளை விற்க ராதிகா சரத்குமாருக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம் | கோப்பு படம்
இரண்டரை கோடி ரூபாய் கடனுக்காக அட மானம் வைக்கப்பட்ட சொத்துக்களை விற்க நடிகை ராதிகா சரத்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக ராடியன்ஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

நடிகை ராதிகா, நடிகர் சரத்குமார் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்த ‘இது என்ன மாயம்’ படம் தயாரிக்கப்பட்டது. இதற்காக எங்கள் நிறுவனத்திடம் 2014-ம் ஆண்டு ஒன்றரை கோடி ரூபாய் கடன் வாங்கினர். இப்பணத்தை 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் திருப்பித் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தனர். பணத்தைக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டால், படத்தின் தொலைக்காட்சி உரிமையையும், அடுத்து எடுக்கும் படத்தின் உரிமையையும் வழங்குவதாக உறுதி அளித்தனர்.

இந்நிலையில், கூடுதலாக ரூ.1 கோடி கடன் கேட்டதுடன், அதற்காக சென்னை தியாகராய நகரில் உள்ள நிலத்துடன் கூடிய வீட்டை அடமானமாகக் கொடுத்தனர். இதனிடையே, நடிகை ராதிகா சரத்குமார் அளித்த வாக்குறுதியை மீறி, ‘பாம்புச் சட்டை’ என்ற திரைப்படத்தை வெளியிட்டுள்ளார். எனவே, எங்கள் நிறுவனத்துக்கு தர வேண் டிய இரண்டரை கோடி ரூபாயை வட்டியுடன் சேர்த்துக் கொடுக்க உத்தரவிட வேண்டும். கடனுக்காக அடமானமாக வைக்கப்பட்ட சொத்துக்களை விற்க தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் இவ்வழக்கை விசாரித்து, கடனுக்காக நடிகை ராதிகா சரத்குமார் அடமானம் வைத்த சொத்துக்களை விற்க தடை விதித்து உத்தரவிட்டார். மனுவுக்குப் பதில் அளிக்கும்படி நடிகை ராதிகா, நடிகர் சரத் குமார் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.

கருத்துக்கள்

கருத்துக்கள்